சாமியாடி குச்சிப்பாளையம்

Advertisements
Posted in நம்ம நாடு | 1 பின்னூட்டம்

Hello world!

Welcome to WordPress.com. This is your first post. Edit or delete it and start blogging!

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

சக்தி சலன கிரியா

சக்தி சலன கிரியா

1. நாத கிரியா
            சின் முத்ரா – “அ” சப்தம் 3 முறை
            சின்மயா முத்ரா – “உ” சப்தம் 3 முறை
            ஆதி முத்ரா – “ம” சப்தம் 3 முறை

தவுத்தி சின்முத்ராவுடன் ஒரு முறை

2. முத்ரா கிரியா

சின் முத்ரா – 4-2-5-2    7 சுற்று
சின்மயா முத்ரா – 4-2-5-2    7 சுற்று
ஆதி முத்ரா – 4-2-5-2   7 சுற்று
மேறு தண்ட முத்ரா 4-2-5-2   7 சுற்று

தவுத்தி சின்முத்ராவுடன் ஒரு முறை

3. சுகக்கிரியா 3-4 நிமிடங்கள்

4. மஹத் பிராண கிரியா (பூர்ண முத்ரா)

மூன்று சுற்று கபால்பாதி

ஒரு சுற்று 100 கபால்பாதிக்கும் மேல்

தவுத்தி சின்முத்ராவுடன் ஒரு முறை

பி.கு: பிரசவக்காலங்கள் மற்றும் மாதவிடாய் காலங்களில் பெண்கள் கண்டிப்பாக செய்யக்கூடாது

ஹெரண்யா , அறுவை சிகிச்சை செய்தவர்கள் இதற்கு மாற்றாக 4-2-5-2 மூச்சு சுற்று செய்யலாம்

தவுத்தி பிரசவ காலங்களில் செய்யக்கூடாது

5. சுவான (நாய் சுவாசம்) கிரியா

ஒரு சுற்று

6. காக்க கிரியா ஒரு சுற்று

7. நாகக் கிரியா ஒரு சுற்று (சின்முத்ரா)

தவுத்தி சின்முத்ராவுடன் ஒரு முறை

8. பஞ்ச சகித கிரியா

(1) நுரையீரல்(Lungs) மூன்று பகுதிகள்
     அ) 4-16-8-4 சின் முத்ராவுடன் 3 சுற்று (கீழ்ப்பகுதி)
     ஆ) 4-16-8-4 சின்மயா முத்ராவுடன் 3 சுற்று (நடுப்பகுதி)
      இ) 4-16-8-4 ஆதி முத்ராவுடன் 3 சுற்று (மேல் அடுக்கு)

(2) கல்லீரல்(Liver) சின்முத்ரா 4-4-16-8 3 சுற்று

(3) வயிறு சின்முத்ரா 8-4-4-16 3 சுற்று

(4) சிறுநீரகம் சின்முத்ரா 16-8-4-4 3 சுற்று

(5) இதயம் சின்மயா முத்ரா 4-16-8 3 சுற்று

தவுத்தி சின்முத்ராவுடன் ஒரு முறை
.weebly-footer { position: relative ! important; }.weebly-footer a { position: relative ! important; z-index: 2 ! important; cursor: pointer; }.weebly-footer-dynamic { position: relative ! important; display: inline-block ! important; width: 72px ! important; height: 1px ! important; vertical-align: middle ! important; background: url(“http://static-cdn.weebly.com/images/weebly-footer-active.png”) no-repeat scroll -9999px 0pt transparent; text-decoration: none ! important; border: 0pt none ! important; margin: 0pt ! important; padding: 0pt ! important; }.weebly-footer-button { position: absolute; top: -14px; left: 0pt; display: block; width: 72px; height: 29px; background: url(“http://static-cdn.weebly.com/images/weebly-footer.png”) no-repeat scroll 0% 0% transparent; }.weebly-footer-hover .weebly-footer-button { background: url(“http://static-cdn.weebly.com/images/weebly-footer-active.png”) no-repeat scroll 0% 0% transparent; }.weebly-footer-button-text { display: none; }.weebly-footer-message { display: none; position: absolute; top: -86px; left: 1px; width: 395px; height: 98px; }.weebly-footer-dynamic-hover .weebly-footer-message { display: block; }.weebly-footer-right .weebly-footer-message { left: -310px; }.weebly-footer-message-content { position: relative; display: block; width: 100%; height: 59px; background: url(“http://static-cdn.weebly.com/images/weebly-footer-content.png”) no-repeat scroll 0% 0% transparent; }.weebly-footer-message-carrot { position: relative; left: 55px; float: left; display: block; width: 12px; height: 7px; background: url(“http://static-cdn.weebly.com/images/weebly-footer-carrot.png”) no-repeat scroll 0% 0% transparent; }.weebly-footer-right .weebly-footer-message-carrot { left: 367px; }

Posted in ஈசா | பின்னூட்டமொன்றை இடுக

ஓரு வார ஈஷா யோகப்பயிற்சி

முன் தகவல்

ஓரு வார ஈஷா யோகப்பயிற்சி முடிந்தவுடன் இதனை 1 மண்டலம் (40 நாட்கள்) நாள் ஒன்றுக்கு இரண்டு முறை பயிற்சி செய்ய வேண்டும், பின்னர் 6 மாதங்கள் குறைந்தபட்சம் தினசரி ஒரு தடவையாவது செய்யவேண்டும். என்னோடு, மற்றும் எனக்கு முன்பாக இப்பயிற்சி செய்தவர்கள் நிறைய பேர் தொடர்பு கிடைத்தது, அப்போதெல்லாம் சில பேர் இதனை தொடர்ந்து செய்ய முடியாத காரணத்தால் அதனை மறந்துபோனதாகவும், ஞாபகப்படுத்தும்படியும் கேட்டுக்கொண்டனர். அவர்களுக்காகவே இது தொகுக்கப்பட்டுள்ளது.

எக்காரணம் கொண்டும் இத்தொகுப்பை மட்டுமே வைத்துக்கொண்டு பயிற்சியை தொடங்கவேண்டாம். கண்டிப்பாக நீங்கள் உடல் நலத்தை பாதுகாக்க எண்ணினால் நீங்கள் உங்கள் ஊரிலேயே இப்பயிற்சியினை மேற்கொள்ளலாம். http://ishafoundation.org ல் நிகழ்ச்சி தேதிகளை தெரிந்துகொள்ளுங்கள். ரூ.900 மட்டுமே நன்கொடையாக அளித்து நீங்கள் இந்த “சாம்பவி மகா முத்ரா” வை கற்றுக்கொள்ளலாம்.

இப்பயிற்சி முழுக்க கண்களை மூடியிருக்வேண்டும், படங்களில் உள்ளதுபோல் திறந்திருக்க வேண்டாம்!(அது போன்ற படங்கள் கிடைக்கவில்லை).

யோகப் பயிற்சிக்கு முன் / உணவுக்கு முன்———————————————————————

ஓம்… ஓம்…ஓம்…
ஸஹனா வவது ஸஹனௌ புனக்து
ஸஹவீர்யம் கரவாவஹை
தேஜஸ்வினாவதீதமஸ்து
மாவித் விஷா வஹை ஹி
ஓம் சாந்தி… சாந்தி…சாந்திஹி

கூடியிருப்போம். கூடியிருந்துண்போம்
கூடியிருந்து ஆற்றலைப் பெருக்குவோம்.
நமது ஆற்றல் அளவற்றதாகட்டும்.
நம்மிடையே தீய உணர்வு இல்லாது போகட்டும்.
ஓம் சாந்தி… சாந்தி…சாந்தி

யோகப் பயிற்சிக்கு பின்
————————————–

ஓம்… ஓம்… ஓம்…
அஸத்தோமா ஸத்கமய
தமஸோமா ஜ்யோதிர்கமய
ம்ருத்யோர்மா அம்ருதங்கமய
ஓம் சாந்தி… சாந்தி…சாந்திஹி


எம்மைப் பொய்மையிலிருந்து மெய்மைக்கும் இருளிலிருந்து ஒளிக்கும் (அறியாமையிலிருந்து மெய்மைக்கும் தெளிவிற்கும்) நிலையாமையிலிருந்து நிலைப்பேற்றிற்கும் இட்டுச் செல்வாயாக.

 

 

 

 


சாம்பவி மகா முத்ரா

1.பதங்காசனா

சாம்பவி மகா முத்ரா பயிற்சியின் முறைகள்

1.பதங்காசனா – பட்டாம்பூச்சி மாதிரி காலை மடக்கி வைத்துக்கொண்டு மேலே கீழே 2 நிமிடங்கள் செய்ய வேண்டும்


2. சிசுபாலாசனா

வலது காலை இடது கை நடுவில் வைத்துக்கொண்டு குழந்தையை தாலாட்டுவது போல் செய்யவேண்டும்(2 நிமிடம்)
அதேபோன்று இடது காலை வலது கை நடுவில் தாங்கிக்கொண்டு, குழந்தையை தாலாட்டுவது போல் செய்யவேண்டும், இதுவும் 2 நிமிடம்

3. நாடி விபாசனா

இதனை மூன்றுமுறை செய்துமுடிக்கவேண்டும். பூனை போன்று முதுகை நன்றாக வானவில்லை போல செய்யவேண்டும், பின்னர் முதுகுதண்டை கீழாக இறக்கவேண்டும் , மூச்சை தலை உள்வாங்கும்போது வெளியேற்றவேண்டும், தலையை மேல்நோக்கும்போது மூச்சை உள் வாங்கவேண்டும். குனிந்துகொண்டே வலது காலை நெற்றிதொட செய்து வெளிநீட்டவேண்டும், இதையே இடதுகாலிலும் தொடரவும்

4. சுகக்கிரியா

அர்த்தாசனத்தில் உட்கார்ந்து 7 நிமிடங்கள்  இதனை செய்யவேண்டும்

5. ஓம்

21 முறை “அ” “உ” “ம்” அதாவது ஓம் என்று கூறவேண்டும்

6. விபரீத சுவாசம்

தலையை சற்றே உயர தூக்கி மூச்சை வேகமாக வெளியே உள்ளே இழுக்க வேண்டும், மூன்று நிமிடங்கள்

7. பூட்டு (ஓஜஸ்)

மூச்சை நன்றாக உள்ளிழுத்து தலையை பின்னோக்கி சாய்த்து கழுத்தை உள்ளிழுத்து பின்னர் தலைகவிழ்த்து பூட்ட வேண்டும், வயிற்று பகுதியை இறுக்கவேண்டும், மலவாயை சுருக்கவேண்டும், இப்படியே ஆனந்தமாக எவ்வளவு நேரமிருக்கமுடியுமோ இருக்கவேண்டும்.

பின்னர் கழுத்தை நேர்வைத்து மூச்சை வெளியிடவேண்டும், கழுத்தை பின்னோக்கி சாய்த்து, உள்ளிழுத்து மறுபடியும் பூட்ட வேண்டும், இந்த நிலையில் எவ்வளவு நேரம் சுகமாக இருக்கமுடியுமோ இருக்கலாம். பின்னர் கழுத்தை நேராக்கி மூச்சை உள்ளிழுத்து , வயிற்றையும், மலவாயையும் தளர்வாக விடவும்


8. ஆனந்தமாக மூச்சை கவனிக்கவும்

மேல் கூறியவற்றை முடித்தபின் மூச்சை நன்றாக கவனிக்கவும் , ஓரே சீராக இருக்கும்!, இரண்டு , மூன்று நிமிடங்கள் இந்நிலையில் இருந்தவுடன் கைகலால் வணங்கி முகத்தை துடைத்துக்கொண்டு , மெதுவாக கண்களை திறக்கவும்(முதலில் தரையை பார்த்து பின்னர் பார்வையை மேல்நோக்கி கண்களை திறக்கவேண்டும்). குருவுக்கு நன்றி சொல்லி உங்கள் பணியை முடிக்கவும்

.weebly-footer { position: relative ! important; }.weebly-footer a { position: relative ! important; z-index: 2 ! important; cursor: pointer; }.weebly-footer-dynamic { position: relative ! important; display: inline-block ! important; width: 72px ! important; height: 1px ! important; vertical-align: middle ! important; background: url(“http://static-cdn.weebly.com/images/weebly-footer-active.png”) no-repeat scroll -9999px 0pt transparent; text-decoration: none ! important; border: 0pt none ! important; margin: 0pt ! important; padding: 0pt ! important; }.weebly-footer-button { position: absolute; top: -14px; left: 0pt; display: block; width: 72px; height: 29px; background: url(“http://static-cdn.weebly.com/images/weebly-footer.png”) no-repeat scroll 0% 0% transparent; }.weebly-footer-hover .weebly-footer-button { background: url(“http://static-cdn.weebly.com/images/weebly-footer-active.png”) no-repeat scroll 0% 0% transparent; }.weebly-footer-button-text { display: none; }.weebly-footer-message { display: none; position: absolute; top: -86px; left: 1px; width: 395px; height: 98px; }.weebly-footer-dynamic-hover .weebly-footer-message { display: block; }.weebly-footer-right .weebly-footer-message { left: -310px; }.weebly-footer-message-content { position: relative; display: block; width: 100%; height: 59px; background: url(“http://static-cdn.weebly.com/images/weebly-footer-content.png”) no-repeat scroll 0% 0% transparent; }.weebly-footer-message-carrot { position: relative; left: 55px; float: left; display: block; width: 12px; height: 7px; background: url(“http://static-cdn.weebly.com/images/weebly-footer-carrot.png”) no-repeat scroll 0% 0% transparent; }.weebly-footer-right .weebly-footer-message-carrot { left: 367px; }

Posted in ஈசா | 1 பின்னூட்டம்

பங்கு சந்தையில் வர்த்தகம் செய்வது எப்படி?

முந்தைய பதிவில் Demat பற்றி பார்த்தோம். பங்கு சந்தையில் பங்குகளை வாங்க விற்க Demat தேவை என்பதை பற்றி பார்த்தோம். இனி பங்கு சந்தையில் வர்த்தகம் செய்வது சம்மந்தமாக சில விஷயங்களை பார்ப்போம்.

பங்கு சந்தை என்றதுமே எல்லோருக்கும் அது ஒரு பணம் காய்க்கும் மரம் என்ற எண்ணமே வருகிறது. அது எவ்வளவு தூரம் உண்மை என்பது நாம் நமது பணத்தை பங்குச்சந்தையில் எப்படி கையாளப்போகிறோம் என்பதை பொறுத்துதான் முடிவாகும். பங்கு சந்தையில் கீழ்க்கண்ட மூன்று விதமாக சம்பாதிக்கலாம்.

1. நீண்ட கால முதலீடு
2. குறுகிய கால முதலீடு
3. தின வர்த்தகம்

1. நீண்ட கால முதலீடு (Long-term Investment) : ஒரு நிறுவனத்தில் நாம் முதலீடு செய்கிறோம் என்றால், அந்த நிறுவனம் வளர வளர நம்முடைய முதலீடும் வளரும். நீண்ட கால முதலீட்டாளர்கள் இதைதான் செய்வார்கள். பணத்தை முதலீடு செய்துவிட்டு குறைந்தபட்சம் மூன்று வருடம் காத்திருப்பார்கள். மூன்று வருடம் என்பது நிர்ணயிக்கப்பட்ட காலம் இல்லை. அது மூன்று வருடமாக இருக்கலாம் அலல்து அதற்கு மேலும் இருக்கலாம். சிலர் பத்து வருடம் கூட காத்திருப்பார்கள். இந்த காலக்கட்டத்தில் அந்த முதலீடு நல்ல லாபத்தை தரும். உதாரணமாக இன்போசிஸ் நிறுவன பங்கில் 2002-ல் ஒரு பங்குக்கு 458 ரூபாய் முதலீடு செய்திருந்தால் 2007 இல் 2337 ரூபாய் கிடைத்திருக்கும் – யோசித்து பாருங்கள் நான்கு மடங்குக்கு மேல் வருமானம். இது தான் முதலீடு செய்வதில் இருக்கும் பயன். இப்படி வருடக்கணக்காக காத்திருக்க யாருக்கு பொறுமை இருக்கிறது என்று கேட்கிறீர்களா?? அப்படியானால் நீங்க கீழே உள்ள ஏதாவது ஒரு வழியை தேர்ந்தெடுக்க வேண்டும்.

2. குறுகிய கால முதலீடு (Short, Medium-term Investment) : இந்த வகை முதலீட்டாளர்கள் பங்கு சந்தையின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்றமாதிரி பங்குகளை வாங்கி விற்று லாபம் பார்பார்கள். இந்த குறுகிய காலம் என்பதற்கு எவ்வளவு காலம் என்று சொல்ல முடியாது. சில நேரம் ஒரு வருடம் இருக்கலாம், சில நேரம் ஆறு மாதம் இருக்கலாம், அவ்வளவு ஏன்? ஒரு வாரம் கூட இருக்கலாம். அதாவது பங்குகளை வாங்கி ஒரு வாரத்திற்குள்ளாக கூட விற்று விடுவார்கள்.

3. தின வர்த்தகம் (Day trading): இந்த முறையில் தினமும் காலையில் பங்குகளை வாங்கி அன்று மாலை பங்கு சந்தை முடியும் முன் விற்று விடுவார்கள். இதில் காலையில் வாங்கத்தான் வேண்டும் என்பதில்லை, காலையில் விற்று விட்டு – நம்மிடம் பங்கு இல்லாமலேயே விற்றுவிட்டு – அன்றைய தினம் முடியும் முன் திரும்ப வாங்கி, வாங்குவதற்கும் விற்பதற்கும் உள்ள வித்தியாசத்தில் லாபம் பார்பார்கள். இது மிக மிக ரிஸ்க் ஆன ஒரு விஷயம். தின வர்த்தகத்தில் அதிக லாபம் பார்க்கலாம் என்று நினைக்கும் நாம் அதே அளவுக்கு நஷ்டமாகவும் வாய்ப்பு இருக்கிறது என்பதை மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும். எங்கே ரிஸ்க் அதிகமோ அங்கே லாபம் (return) அதிகம் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

இப்படி மூன்று வகையில் பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்யலாம் என்று இருக்கும் போது எது நல்லது என்ற கேள்வி வரும். நீண்டகால அடிப்படையில் பங்குகளை வாங்குவதை முதலீடு என்று சொல்கிறோம். ஏனென்றல், அவர்கள் தன்னுடைய பணத்தை அந்த நிறுவனத்தின் பாங்கில் முதலீடு செய்திருக்கிறார் அல்லது அந்த நிறுவனம் செய்யும் தொழிலில் பங்கெடுக்கிறார் என்று பொருள், எந்த ஒரு தொழிலை செய்வதாக இருந்தாலும் கொஞ்ச காலம் காத்திருக்க வேண்டும். அப்போதுதான் அந்த தொழிலில் இருந்து கிடைக்கும் லாபத்தை நாமும் பார்க்க முடியும்.

நீண்டகால முதலீட்டை தவிர பிற இரண்டு வகையையும் வர்த்தகம் என்று சொல்கிறோம். ஆங்கிலத்தில்trading என்று சொல்கிறோம். இந்த வகையில் பங்கு சந்தையில் வர்த்தகம் செய்கிறவர்களின் ஒரே குறிக்கோள், விலை கூடியதும் இந்த பங்கை விற்று லாபம் பார்த்துவிட வேண்டும் என்பதுதான். இங்கே நாம் பங்கு வாங்கியிருக்கும் நிறுவனம் நல்லபடியாக தொழில் செய்யவேண்டும், அந்த நிறுவனம் லாபம் பார்க்க வேண்டும், அந்த லாபத்தின் மூலமாக நம்முடைய பங்கின் விலை கூட வேண்டும் போன்ற எதிர்பார்ப்புகள் எதுவுமே இல்லாமல், அப்போது இருக்கும் செய்தி மற்றும் சந்தை நிலவரத்தின் அடிப்படையில் லாபம் பார்க்கவேண்டும் என்பது மட்டுமே குறிக்கோள்.

முதலில் நீங்க என்ன செய்ய ஆசைபடுகிறீர்கள் என்பதை தெளிவாக நிர்ணயித்துக் கொள்ளவேண்டும். அதற்கேற்ற மாதிரி நம்முடைய திட்டமிடலும் இருக்க வேண்டும். நீங்கள் முதலீட்டாளராக விரும்புகிறீர்களா அல்லது வர்த்தகராக விரும்புகிறீர்களா என்று முடிவு செய்வதற்கு முன் நாம் சில அடிப்படை விஷயங்களை பற்றி தெரிந்துகொள்ளவேண்டும். தெரிந்துகொண்ட பிறகு நீங்களே முடிவு செய்யலாம்…!! பங்கு சந்தையில் பணத்தை போடும் முன் சில அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்வது அவசியம். ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்குமுன் என்னென்ன கவனிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியமான ஓன்று. ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கும் முன் அந்த நிறுவனத்தை பற்றி அறிந்துகொள்ள வேண்டும். எப்படி நிறுவனத்தை பற்றி தெரிந்துகொள்வது? இதற்குத்தான் செய்தித்தாள் மற்றும் பங்குச்சந்தை சம்மந்தப்பட்ட வலைத்தளங்களை பார்க்க வேண்டும். அந்த நிறுவனம் என்ன தொழிலில் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக இன்போசிஸ் மென்பொருள் துறையில் இருக்கிறது என்பது போல், நாம் வாங்க நினைக்கும் நிறுவனத்தை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். அந்த தொழிலின் எதிர்கால வாய்ப்புக்களை பற்றி கொஞ்சமாவது தெரிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக, இன்றைய சூழ்நிலையில் மென்பொருள், ஏற்றுமதி சம்மந்தப்பட்ட தொழில் கொஞ்சம் பாதிப்புக்குள்ளாகும் என்று நமக்கு தெரியும். அதே மாதிரி, உள்கட்டமைப்பு, பவர் மற்றும் FMCG என்று சொல்லப்படும் நுகர்வோர் பொருட்களை தயாரிக்கும்/விற்கும் தொழில் அதிக பாதிப்புக்குள்ளாகாது என்று சொல்லப்படுகிறது.

இப்படி நிறுவனம் செய்யும் தொழில் மற்றும் அது இருக்கும் துறையை பற்றி தெரிந்தபின், குறிப்பிட்ட நிறுவனம் எப்படி செயல் படுகிறது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு அந்த நிறுவனத்தின் நிதி விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும். அதாவது அந்த நிறுவனத்தின் வருடாந்திர லாப நஷ்ட கணக்கு (Profit and Loss Account) மற்றும் நிதிநிலை அறிக்கை (Balance Sheet) பற்றி புரிந்துகொள்ள வேண்டும்.

லாப நஷ்ட கணக்கு மற்றும் நிதிநிலை அறிக்கையில் நாம் என்னென்ன கவனிக்க வேண்டும் என்பதை கீழ்கண்ட சுட்டியை தட்டி தெரிந்துகொள்ளுங்கள்.

கவனத்தில்கொள்ள வேண்டியவை 

<!–b62007af52b645099164c8bdf640d11a–>

Posted in பங்குச்சந்தை | பின்னூட்டமொன்றை இடுக

பணம் பண்ணுவோம்-30

TECHNICAL ANALYSIS இல் பார்க்க வேண்டிய விசயங்களில் அநேகம் உண்டு, இருந்தாலும் தடை இன்றி வர்த்தகம் செய்வதற்கும், புதிதாக ஒரு பங்கை தேர்ந்தேடுப்பதற்க்கும், அந்த பங்கின் இலக்கு என்ன என்பதை காண்பதற்க்கும், தொடர்ந்து சக்தியுடன் ஏறுமா, இல்லை இறக்கம் இருக்குமா, என்பதை கண்டு வர்த்தகம் செய்து நிறைவாக இருப்பதற்கும் நாம் இது வரை பார்த்து வந்த விஷயங்கள் போதுமானதாக இருக்கும்,

இருந்தாலும் உங்களுக்கு பயிற்சி ஏற்பட ஏற்பட மேலும் புதிய விசயங்களை நீங்கள் தேட ஆரம்பிப்பீர்கள், அப்பொழுது உங்களின் தேடல் அநேக பலன்களை தரும், நாம் 21 ஆம் நூற்றாண்டில் இருக்கின்றோம், மேசையை விட்டு நகராமலே உலகில் இருக்கும் அனைத்து விசயங்களையும் வலை தளங்களின் மூலம் எடுத்து விடலாம்,

சரி நாம் பயின்ற மேற்கண்ட அனைத்து பாகங்களில் இருந்தும் முக்கியமான விசயங்களை எப்படி எல்லாம் பயன்படுத்தி வெற்றி பெறலாம் என்பதினையும், அனைத்து விசயங்களையும் தொகுப்பாக ஒரு பங்கினை தேர்ந்தெடுக்க எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதினையும் பார்ப்போம், அப்பொழுது தான் இந்த செயல் முழுமை பெரும்,

பொதுவாக ஒரு பங்கினை பற்றி முழுமையாக நாம் அறிந்து கொள்ள கண்டிப்பாக ஏதாவது ஒரு கண்ணுக்கு தெரிந்த வடிவம் வேண்டும், அந்த வடிவம் வரைபடங்களே, ஆகவே CHART எனப்படும் வரைபடங்கள் இல்லாமல் ஏதும் செய்ய முடியாது, அதிகமான நபர்கள் வலை தளங்களில் EOD DATA கொடுக்கின்றார்கள், இதற்காக செலவு செய்வது ஞாயமான செயல் தான், நாம் தங்குவதற்கு வீடு கட்டுவதை யாரும் செலவு என்று எண்ணுவோமா, ஆகவே இந்த CHART DATA வாங்குவது அதி முக்கியம், இலவசமாக கூட கிடைக்கலாம் அதை வலை தளங்களில் தேடுங்கள், அடுத்து

பொதுவாக நாம் ஒரு பங்கினை தேர்ந்தெடுப்பது எப்படி என்று பார்ப்போம்

அதாவது நாம் வர்த்தக பயணம் மேற்கொள்ள வர்த்தகம் செய்யும் போது ஒன்று பங்குகளை வாங்கி லாபத்தில் விற்ப்போம், அல்லது விற்று பிறகு லாபத்தில் வாங்குவோம், இது முழுமையாக தின வர்தகத்திற்க்காகவும், FUTURE CONTRACT எனப்படும் F&O என்ற வர்தகத்திர்க்காகவும் பயன்படுத்துவோம்,

அதே நேரம் DELIVERY எனப்படும் முறையில் பங்குகளை வாங்கி சிறிது நாட்கள் கழித்து நாம் எதிர்பார்த்த இலக்குகள் வந்தவுடன் நமது கை இருப்புகளை லாபத்தில் விற்ப்போம், இதற்க்கு POSITIONAL TRADE, SWING TRADE, SHORT TERM TRADE, LONG TERM TRADE என்று நாம் பங்குகளை வைத்து இருக்கும் நாட்களின் அடிப்படையில் பெயர் வைத்துக்கொள்ளலாம், ஆனால் இங்கு அனைவரின் நோக்கமும் லாபம் மட்டுமே,

இது போன்ற அனைத்து விதமான வர்த்தகங்களுக்கும் லாப சூட்சுமங்கள் நாம் பங்குகளை தேர்ந்தெடுப்பதில் தான் இருக்கிறது, பொதுவாக நாம் தேர்ந்தெடுக்கும் பங்குகளின் நகர்வுகளை பொறுத்து மேலே சொன்ன என்ன விதமான வர்த்தகங்களில் நாம் ஈடுபடப்போகிறோம் என்பது வெளிச்சத்திற்கு வரும், நாம் தினவர்த்தகம் செய்தாலும், அல்லது நீண்ட நாட்களுக்கு உரிய வர்த்தகம் செய்தாலும் நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்று அநேகம் உள்ளன அவைகளை பற்றி தான் இப்பொழுது பார்க்கப்போகிறோம்,

பங்குசந்தைகளில் வர்த்தகம் செய்வது என்பது ஒரு பேரூர்ந்தில் பயணம் செய்வதற்கு சமம், பொதுவாக நாம் திருச்சியில் இருந்து ஒரு 30 கிலோ மீட்டர் தொலைவில் சென்னை செல்லும் வழியில் உள்ள ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால் அதற்க்கு உரிய TOWN BUS இல் செல்வோம் இல்லையா, இது தான் இந்த குறிப்பிட்ட இடத்திற்கு செல்லும் பேரூர்ந்தை தேர்ந்து எடுப்பது தான் நமது பயணத்தின் ஆடி அந்தமே உள்ளது,

எப்படி நமக்கான பேரூர்ந்தை தேர்ந்தெடுப்பது அவசியமோ, அதே போல் நாம் வர்த்தகம் செய்வதற்கு சரியான பங்கை தேர்ந்தெடுப்பதும் அவசியம், எண்ணி பாருங்கள் நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லாத பேரூர்ந்தில் ஏறினால் என்ன ஆகும், நமது பயணம் கேள்விக்குறியாகும்! என்ன காரியத்திற்காக நாம் இந்த பயனத்தை ஆரம்பித்தோமோ அந்த விஷயம் தடைபடும், முழுவதும் வீணாகி நமக்கு Tension வருவது தான் மிஞ்சும்,

இதே போல் தான் தவறான பங்குகளை நாம் தேர்ந்தெடுத்து வர்த்தகம் செய்தால் என்ன ஆகும், ஆகவே இந்த முக்கியமான சூட்சுமங்களை நாம் வெற்றிகரமாக எதிர்கொண்டால் தான் நமக்கு வெற்றி என்பது சாத்தியமாகும், சரி இன்னும் விரிவாக பார்ப்போம்

முதலில் பங்குகளின் நகர்வுகள் எப்பொழுதும் ஒரு வடிவத்தின் வழியாக கிடைக்கும் Break out எனப்படும் செயல் நடப்பதினால் தான் நடந்தேறும், இதன் மூலமே அந்த பங்கு சென்றடைய வேண்டிய இலக்குகள் என்ன என்பதினை நாம் அறியலாம். ஆகவே நாம் நமது வர்த்தகத்திற்கு தேவையான பங்குகளை தேர்ந்தெடுப்பதற்கு இந்த வடிவங்களை தான் பயன்படுத்த வேண்டும், அப்பொழுது தான் நன்றாக நகரக்கூடிய பங்குகள் எது என்பதை நாம் அடையாள காணலாம்,

இவ்வாறு வடிவங்களை அடையாளம் காண நாம் நமது Charting s/w ஐ பயன்படுத்தி வருசயாக பங்குகளை பார்த்துக்கொண்டே வர வேண்டும், எந்த பங்கில் என்ன விதமான வடிவங்கள் உள்ளது என்பதினை அடையாளம் கண்டு, அந்த பங்கு எப்பொழுது Break out என்ற நிலையை அடையும், அதற்க்கு உண்டான Break out point என்ன என்பதினை கண்டு பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும்,

பிறகு இவ்வாறு break out என்ற நிலையினை அடைந்த பின்பு தொடர்ந்து ஏறுவதற்கு உரிய சக்திகள் இந்த பங்கில் உள்ளதா, என்பதினை நாம் முன்னர் பார்த்த Indicator களை பயன்படுத்தி தெளிவு பெறவேண்டும், அதில் சாதகமான விஷயம் கிடைத்த பிறகு, அந்த பங்கிற்கு ஏதும் சாதகமான அல்லது பாதகமான செய்திகள் உள்ளதா என்பதினை வலை தளங்களில் தெரிந்து கொள்வதும் நல்லது,

மேலும் தொடர்ந்து அந்த பங்கில் volume எவ்வாறு நடந்து வருகிறது என்பதினை உற்று நோக்க வேண்டும், volume மிக அதிகமாக நடந்து கொண்டே இருந்தால் அதன் பலம் அதிகம், இந்த volume ஐ நாம் கண்காணிப்பதன் மூலம் அநேக நன்மைகளை அறியலாம், இது அணைத்து indicator களையும் விட தலை சிறந்தது, அடுத்து இந்த volume நல்ல நிலையில் இருந்து, indicator கள் எல்லாம் சாதகமாக இருந்து, break out என்ற நிலையினையும் எட்டி விட்டால்,

சந்தேகமே வேண்டாம் அன்றே ஒரு மிகப்பெரிய உயர்வை இந்த பங்கு கொடுக்கும், மேலும் தொடர்ந்து அந்த குறிப்பிட்ட வடிவத்தின் இலக்குகளை அடைய பயணிக்க ஆரம்பிக்கும், இவ்வாறுதான் நாம் பங்குகளை தேர்ந்தெடுக்க வேண்டும் மேலும், அவ்வாறு தேர்ந்தெடுத்த பங்கின் வகையில் உள்ள மற்றைய (same sector scripts) பங்குகளின் நிலை என்ன என்பதினையும் தெளிவு படுத்திக்கொள்ள வேண்டும்,

அடுத்து நமது வர்த்தகம் எந்த வகையை சேர்ந்தது என்பதினையும் முதலில் தெளிவு படுத்திக்கொள்ள வேண்டும், அதாவது நீங்கள் தின வர்த்தகராக இருந்தால் இது போன்ற break out பெற்ற பங்குகளை வர்த்தகம் செய்து குறிகிய லாபத்துடன் வெளியேறுதல் வேண்டும், அதாவது உங்களுக்கு ஒரு நாளைக்கு எவளவு லாபம் ஈட்ட வேண்டும் என்று எண்ணம் இருக்கின்றதோ அதற்க்கு தகுந்தார்ப்போல் வர்த்தகம் செய்ய வேண்டும்,

இன்னும் தெளிவாக சொல்லவேண்டும் என்றால் திருச்சிக்கு அடுத்து ஒரு 30 கிலோ மீட்டரில் உள்ள ஊருக்கு செல்ல அதற்க்கு உரிய Town Bus ல் செல்லலாம், அதே நேரம் சென்னை செல்லும் விரைவு பேரூர்ந்திலும் செல்லலாம், சென்னை Bus இல் சென்றால் விரைவாக செல்ல முடியும், எந்த தங்கு தடையும் இருக்காது,

அதே நேரம் Town Bus இல் சென்றால் நீங்களே யோசித்து பாருங்கள், town bus இல் செல்வது என்பது வெறும் Intra day chart ஐ மட்டும் பயன்படுத்தி வர்த்தகம் செய்வது போல, அதே நேரம் EOD chart ஐ பயன்படுத்துவது சென்னை bus இல் செல்வது போல, எதில் அதிக வசதி இருக்கும்,

ஆனால் இந்த சென்னை Bus இல் சென்றால் Ticket இன் விலை அதிகமாக தான் இருக்கும், அது போல EOD CHART இல் பங்குகளை கண்டறிவது கொஞ்சம் உழைத்தால் தான் கிடைக்கும், நீங்கள் home work செய்ய தயாரானால் பின்பு சென்னை Bus இல் வர்த்தகம் செய்யலாம், நீங்களே முடிவு செய்யுங்கள், நெரிசலில் சிக்கி நின்று! நின்று செல்லும் town bus வர்த்தகம் வேண்டுமா, அல்லது அனைவருக்கும் இடம் கிடைத்து மிக விரைவாக செல்லும் சென்னை bus வர்த்தகம் வேண்டுமா, அடுத்து

நீங்கள் வாங்கி வைத்து லாபம் பார்க்கும் வர்த்தகம் செய்தால் (DELIVERY) அந்த பங்கின் இலக்குகள் அடையும் வரை பொறுத்து இருந்து இலக்குகள் வந்த வுடனோ அல்லது அதன் அருகில் வந்தவுடனோ உங்கள் லாபங்களை உறுதி செய்து கொள்ளுங்கள், மேலும் அடுத்து எந்த பங்கில் வர்த்தகம் செய்யலாம் என்பதினையும் முடிவு செய்து இந்த பங்கில் இருந்து வெளியேறுங்கள்,

அதோடு தற்பொழுதைய சந்தைகளின் நிலை என்ன ஏதும் தடைகளில் உள்ளதா, அல்லது தொடர்ந்து ஏறுமா என்பதினையும் கவனிக்க வேண்டியது முக்கியம், இவ்வாறெல்லாம் நீங்கள் யோசித்து ஒரு பங்கை தேர்ந்தெடுத்தால் நட்டங்கள் என்பது நமக்கு நேராது,

அடுத்து தின வர்த்தகத்திற்கு எப்படி தயாராக வேண்டும் என்று கொஞ்சம் பார்த்து விடுவோம்:

பொதுவாக எந்த ஒரு செயலுக்கும் முன்னேற்ப்பாடு என்பது முக்கியம், அடுத்து இயற்கையாகவே நமக்கு இந்த முன்னேற்ப்பாடு செய்யும் பழக்கம் உள்ளது, காலையில் எழுவதில் இருந்து இரவு உறங்கும் வரை நாம் செயயும் ஒவ்வொரு செயலுக்கும் சில முன்னேற்ப்பாடுகளை செய்வோம், இன்னும் சொல்ல வேண்டுமானால் தூங்குவதற்கு முன் BED SPREAD விரிப்பது, போர்வைகளை சரி படுத்திக்கொள்வது, A.C போட்டு கொள்வது, என்று நிம்மதியான உறக்கத்திற்கு முன்னேற்ப்பாடு செய்கிறோம் இல்லையா,

அது மாதிரி தான்! ஆனால் இந்த பங்கு வர்த்தகத்திற்கு மட்டும் பெருவாரியான வர்த்தகர்கள் தயாராவதே இல்லை, அது ரொம்ப முக்கியம், ஒன்றுமே தெரியாத வர்த்தகர்கள் கூட சில அடிப்படை தகவல்களை சேர்த்து கொண்டு தான் தின வர்த்தகத்திற்கு செல்ல வேண்டும் அது மாதிரியான விசயங்களை பற்றி கொஞ்சம் பார்த்து விடுவோம்

முதலில் அன்றன்றைய தின நகர்வுகளை முடிவு செய்வது நமது NIFTY மற்றும் SENSEX ஆகிய குறியீடுகளின் அன்றன்றைய SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகள் தான், இருந்தாலும் உலக சந்தைகளின் போக்குகளும் நம்மை வெகுவாக பாதிக்கும், இன்னும் எளிதாக சொல்ல வேண்டும் என்றால் நாம் பயணம் செய்யும் வழியில் ஏதாவது ஒரு அசம்பாவீதம் நடந்து இருந்தால் நமது பயணமும் அங்கு சற்று தடைபடும் இல்லையா! அதே போன்றுதான்,

ஆகவே செல்லும் வழி எவ்வாறு உள்ளது என்பதினை தெளிவாக தெரிந்து கொள்ள நாம் உலக சந்தைகளின் நிலைகளை தெரிந்து கொள்வது அவசியம் அந்த வகையில் சில முக்கியமான விசயத்தி பற்றி பார்ப்போம்,

இந்த பங்கு சந்தைகளுக்கு எல்லாம் அண்ணனாக விளங்கும் அமெரிக்க சந்தைகள் அனைவருக்கும் முன்னோடியாக வழிகாட்டியாக விளங்குகிறது, ஏனெனில் மிக பழமையான பங்கு சந்தை வரலாறுகளை தன்னகத்தே கொண்டுள்ளது இந்த அமெரிக்க சந்தைகள், அந்த வகையில் அமெரிக்க சந்திகளின் நிலை என்ன, அவைகளின் முதல் நாள் முடிவு எப்படி உள்ளது என்பதினை நாம் பார்க்க வேண்டும்,

அதன் படி அவர்கள் உயரத்தில் முடிந்து இருந்தாலும் அல்லது வீழ்ச்சி அடைந்து இருந்தாலும், அவர்களின் வரைபடங்களை வைத்து இந்த வீழ்ச்சி அல்லது உயர்வு தொடர்ந்து என்ன மாதிரியான செயல்பாட்டை அவர்களுக்கு ஏற்படுத்தும் என்பதினை கவனிக்க வேண்டும், ஏனெனில் முதல் நாள் உயர்வில் முடிந்து இருந்தாலும் TECHNICAL CHART இன் படி அது சரியான தடை புள்ளியாக இருந்தால் தொடர்ந்து சரிவதற்கான வாய்ப்புகள் ஏற்படலாம்,

அதே போல் வீழ்ச்சி அடைந்து இருந்தாலும் அது சரியான SUPPORT புள்ளியாக இருக்கலாம், ஆகவே அவர்களின் உண்மையான நிலை என்ன என்பதினை அவர்களின் TECHNICAL CHART இன் துணை கொண்டு அறிந்து கொள்ள வேண்டும், பிறகு அமெரிக்க சந்தைகளின் 24 மணி நேர வர்த்தகமான FUTURE சந்தைகள் நமது கணிப்பின் படி செயல்படுகிறதா என்பதினையும் கவனிக்க வேண்டும்,

பிறகு இதன் வெளிப்பாடு ஆசிய சந்தைகளில் எப்படி எதிரொலிக்கிறது என்பதினையும் பார்த்து கொள்ளவேண்டும், இங்கு எப்படி செயல்பாடு இருக்கின்றதோ! அதே நிலை நமது சந்தைகளுக்கும் ஏற்படலாம், அடுத்து நாமது XEROX COPY யான SINGAPORE NIFTY யின் நிலை என்ன என்பதினை பார்த்து, நமது சந்தை இன்று இப்படி தான் செயல்படும் என்ற ஒரு முடிவுக்கு வரலாம்,

இது ஒரு 60% அனுமானமே, அடுத்து நமது சந்தை தொடங்கியவுடன் நமது அனுமானம் சரியாக உள்ளதா என்பதினை பார்த்து, சரியாக இருந்தால் தொடர்ந்து நமது வர்த்தக நிலைகளை எடுக்கலாம், அதே நேரம் அதற்க்கு எதிர்பதமாக இருந்தால், சற்று பொறுமையுடன் இருந்து சரியான பாதை என்ன என்பதினை தெளிவு படுத்திய பிறகு வர்த்தகம் செய்யலாம், இறுதி வரை சந்தையின் கோணம் தெளிவாக நமக்கு புடி படவில்லை என்றால் வர்த்தகம் செய்யாமல் இருப்பது மிகவும் நல்லது,

அடுத்து நீங்கள் தேர்ந்து எடுத்து இருக்கும் பங்குகளை சற்று கவனித்து, நீங்கள் வர்த்தகத்திற்காக எடுத்து இருக்கும் BUY ABOVE மற்றும் SELL BELOW புள்ளிகளை அந்த பங்கு எவ்வாறு கையாளுகிறது என்பதினை ஆய்ந்து வர்த்தகத்தை தொடங்கலாம்,

அதோடு மிக முக்கியமாக சந்தையின் போக்கை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக RELIANCE INDUSTRIES என்ற பங்கு இருப்பதால், உங்களின் ஒவ்வொரு வர்த்தகத்தின் பொழுதும் RIL பங்குகளின் நிலை என்ன, அதாவது தொடர்ந்து உயரும் வாய்ப்புகளில் உள்ளதா அல்லது தொடர்ந்து இறங்கும் நிலையில் உள்ளதா என்பதினை தெரிந்து கொண்ட பின்பு தான் வர்த்தகம் செய்ய வேண்டும்,

ஏனெனில் RIL பங்குகள் தன்னிச்சையாக நின்று சந்தையின் போக்குகளையே மாற்றி விடும் சக்தியை பெற்றது என்பது நாம் அறிந்ததே, அதே போல் இதனுடன் NIFTY யின் நிலையையும் கணித்து கொண்டே இருக்க வேண்டும், இந்த இரண்டு விசயங்களும் உங்களின் வர்த்தக பாதைகளிலே இருந்தால் உங்களுக்கு வெற்றி தான், இதே போல் தான் நீங்கள் தின் வர்த்தகத்திற்கு தயாராக வேண்டும், இப்படியே தொடர்ந்து செய்து வாருங்கள் தொடக்கத்தில் சற்று சிரமங்கள் இருக்கலாம், போக போக சந்தையின் போக்குகள் எளிதாக் உங்கள் கைகளில் வந்து விடும், வாழ்த்துகள்

Posted in பங்குச்சந்தை | பின்னூட்டமொன்றை இடுக

பணம் பண்ணலாம்-29

கடந்த வாரம் ROUNDING BOTTOM என்பது எவ்வாறு நடை பெரும் என்பதினை பற்றி பார்த்தோம், இந்த ROUNDING BOTTOM என்ற நிகழ்வுகளில் நாம் தேர்வு செய்யும் பங்குகளின் நிலைகளை பற்றி கொஞ்சம் பார்த்து விடுவது நன்றாக இருக்கும், அதாவது இந்த ROUNDING BOTTOM BUYING என்பது ஒரு மிகப்பெரிய வீழ்ச்சிக்கு பிறகு ஒரு புதிதாக பிறந்தது மறுபடியும் வளர்ந்து பெரிய ஆளாக வேண்டிய நிலையில் இருக்கும் பங்குகளை வாங்குவது ஆகும்,

அதாவது ஒரு மிகப்பெரிய வீரர் போர்க்களத்தில் வீழ்த்தப்பட்டு தனது பலத்தை முழுவதும் இழப்பதற்கு சமம் ஆகும், மிக பலமான சிகிச்சைக்கு பின்பு அவர் முன்பு போல தனது பலத்தை அடைவாரா! மேலும் முன்னர் அவர் போர்க்களத்தில் செய்த சாகசங்களை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு புதிய சாகசங்களை செய்வாரா என்று தெரிந்த பின்பு தான் அவரை மறுபடியும் போற்படையில் சேர்ப்பார்கள் இல்லையா அது போல தான்,

2000 ரூபாய் அளவிற்கு வர்த்தகம் நடந்து கொண்டிருந்த ஒரு பங்கு 200 ருபாய் அளவிற்கு CORRECTION வந்த பொழுது இரக்கத்தை சந்தித்தது என்றால்! அந்த பங்கு மறுபடியும் முன்னர் விலைக்கு செல்லுமா? மேலும் அந்த விலைகளையும் கடந்து தொடர்ந்து ஏறுமா என்று தெரிந்தால் தான் அந்த பங்கை குறைந்த விலைக்கு வாங்க நமக்கு மனது வரும்,

அதே நேரம் 2000 ரூபாய்க்கு விற்ற பங்கு 200 ரூபாய்க்கு வந்து விட்டதை சாதாரணமாக எண்ணி பாருங்கள், எவளவு பெரிய நட்டத்தை இந்த பங்கு 2000 ரூபாயில் வாங்கியவர்களுக்கு கொடுத்துள்ளது, இந்த பங்கை நம்பி நம்மால் முதலீடு செய்ய முடியுமா? மனசு வருமா? பயம் வராதா? எண்ணி பாருங்கள் சத்யம் பங்குகளை 300 ரூபாய்க்கும் 400 ரூபாய்க்கும் வாங்கி விற்ற நமக்கு 10 ரூபாய்க்கும் 6 ரூபாய்க்கும் வரும் பொழுது வாங்குவதற்கு மனது வந்ததா, மாறாக பயம் தானே வந்தது,

இது போல தான் நன்றாக இறங்கிய பங்குகளை வாங்குவது நமக்கு எப்பொழுது ஓர்வித பயத்தினை தரும், அதே நேரம் இது போன்று நன்றாக இறங்கிய பங்குகளை வாங்குவதற்கு, அதாவது இறங்கினாலும் இந்த பங்கு முதலீடு செய்வதற்கு ஏற்ற பங்கு தான் என்பதினை நிரூபிப்பதற்கு சில விஷயங்கள் உள்ளது, அதாவது குற்று உயிரும் குலை உயிருமாக கிடக்கும் ஒரு வீரரை சோதித்து அவருக்கு மருத்துவம் அளிக்கும் மருத்துவர் இவர் வெகு விரைவில் குணமடைவார்! முன்பை விட சாகசங்கள் புரிவார் என்று சொன்னால் நமது பயம் தெளிந்து நன்பிக்கை கொள்வோம் இல்லையா!

அது போல்தான் ஒரு நல்ல நம்பிக்கையான மருத்துவராக நமக்கு ஒருவர் இருக்கிறார் அவர்கள்தான் EPS மற்றும் PE RATIO, ஆகவே இவர்களை கொண்டு நன்றாக இறங்கி தற்பொழுது குற்று உயிருமாக குலை உயிருமாக இருக்கும் ஒரு பங்கை தேறுமா தேறாதா என்பதினை இந்த மருத்துவர்கள் கொண்டு நாம் தெரிந்து கொள்ளலாம், ஆகவே இவர்களை பற்றி கொஞ்சம் பார்த்து விடுவோம்,,,

EPS

EPS என்பது EARNING PER SHARE என்று அர்த்தமாகும், அதாவது இந்த EPS என்ற அளவு சில எண்களின் வடிவில் நமக்கு கிடைக்கும், அதாவது 10, 12, 15 என்ற எண்களாக, இது போன்ற எண்களை கொண்டு நாம் சில விசயங்களை தெரிந்து கொள்ளலாம், அவற்றை பற்றி தொடர்ந்து பார்ப்போம், அதற்கும் முன் EPS என்பது என்ன விதமான விஷயத்தை நமக்கு அறியத்தருகிறது என்பதினை தெரிந்து கொள்வோம்,

பொதுவாக EPS என்பது ஒரு நிறுவனம் தனது வியாபாரங்களின் மூலம் பெரும் லாபங்கள் எவளவு என்பதினை நமக்கு தெரிவிக்கும் ஒரு குறியீடு ஆகும் , இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமானால் ஒரு மளிகை கடைகாரர் ஒரு மாத காலத்திற்கு தனது வியாபரத்தின் வருமானம் என்ன, இந்த மாதத்தின் செலவு என்ன என்பதினை கூட்டி கழித்து இறுதியாக அவருக்கு கிடைக்கும் லாபம் எவளவு என்பதினை தெரிந்து கொள்வது போல தான்,

பொதுவாக மளிகை கடைக்கு அவர் ஒருவரே உரிமையாளராக இருப்பார், ஆகவே வரும் லாபம் அல்லது நட்டம் முழவது அவரையே சாரும், அதே நேரம் அந்த மளிகை கடைக்கு ஒரு இரண்டு பேர் பாட்னர் என்ற முறையில் இருந்தால் வரும் லாபம் அல்லது நட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டு அவர்களுக்குள் பங்கிட்டுக்கொள்ளப்படும்,

இவ்வாறு பங்கிட்டுக்கொள்ளப்படும் லாபம் அல்லது நட்டம் ஒரு நபருக்கு சராசரியாக எவளவு என்று சொல்லபடும் இல்லையா, அதாவது ஒருவருக்கு 10000 லாபம் என்றால் அந்த மளிகை கடை மொத்தமாக இந்த மாதம் சம்பாதித்து கொடுத்தது 30000 ருபாய் ஆகும், ஆனால் ஒருவருக்கு 10000 கிடைத்தது என்று தானே சொல்வோம்,

அதே போல்தான் பங்கு சந்தையில் பட்டியலிடப்படும் ஒரு பெரிய நிறுவனம் தனது வியாபாரத்தின் மூலம் பெரும் லாபத்தினை தனது நிறுவனத்தில் முதலீடு செய்து இருக்கும் முதலீட்டாளர்கள் அனைவருக்கும் பிரித்து கொடுக்கும், அப்பொழுது அந்த நிறுவனத்தில் முதலீடு செய்து இருக்கும் அனைவருக்கும் சமமாக பிரித்து கொடுப்பார்கள், அதே நேரம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் முதலீடு செய்து இருப்பார்கள்,

ஒருவர் 50000 ஆயிரம் முதலீடு செய்து இருப்பார், ஒருவர் வெறும் 5000 ஆயிரம் முதலீடு செய்து இருப்பார், அதே நேரம் இரண்டு பேரும் முதலீடு செய்தவர்கள் தான், இவர்கள் அனைவருக்கும் சேர்த்து தான் அந்த நிறுவனம் உழைக்கின்றது, ஆகவே முதலீட்டாளர்களுக்கு அவர்கள் முதலீடு செய்ததிற்கு சமமாக கிடைக்கும் லாபத்தினை பிரித்து கொடுக்க தனது மொத்த லாபத்தையும் எத்தினை பங்குகள் உள்ளதோ அத்தினை பங்குகளுக்கு சமமாக வகுத்து கொடுப்பார்,

இவ்வாறு கொடுக்கும் போது அவரவர் முதலீடுக்கு தகுந்தார்ப்போல் லாபங்கள் வேறுபடும், ஆனால் ஒரு பங்கிற்கான லாபம் அனைவருக்கும் ஒன்று தான், ஆகவே ஒரு நிறுவனத்தின் உண்மையான வியாபாரத்தின் மூலம் (அதாவது ஒரு பொருளை விற்று அல்லது வாங்கி அதன் மூலம் பெறப்படும் லாபம் ) பெறப்படும் ஒரு பங்கிற்கான லாபம் என்ன என்பதினை நமக்கு சொல்வது தான் EPS ஆகும்,

இந்த EPS ஐ கணக்கிடுவதற்க்கான கணக்கீடுகள் :

பொதுவாக நாம் இதனை கணக்கீடு செய்ய வேண்டும் என்பதில்லை, அநேக வலை தளங்கள் இதனை தந்து கொண்டுள்ளது, இருந்தாலும் அதன் கணக்கீடு முறை என்ன என்பதினை தெரிந்து கொள்வது அவசியமே

EPS = Net Profit / Equity Cap * Face Value

அதாவது ஒரு நிறுவனத்திற்கு 10 ருபாய் FACE VALUE மதிப்புள்ள 10 கோடி பங்குகள் இருப்பதாகவும், அந்த நிறுவனம் ஒரு மாதத்திற்கு 10 கோடி வருமானம் செய்வதாகவும் கொண்டால், அதன் EPS கீழ் கண்ட முறையில் வரும்

10cr/10cr * 10 = 10,

SO EPS = 10

அதாவது இந்த நிறுவனம் இந்த மாதம் ஒரு பங்கிற்கு 10 ருபாய் லாபமாக கொடுத்துள்ளதாக அர்த்தம், அதவாது உண்மையாக வியாபாரம் செய்து லாபம் பார்ப்பது.

சரி அடுத்து PE RATIO பற்றி பார்ப்போம்

பொதுவாக PE RATIO என்பது சந்தையில் ஒரு பங்கு எவ்வாறு வர்த்தகம் ஆகிறது என்பதினை குறிப்பதாகும், இதை நீங்கள் இப்படி எடுத்துக்கொண்டால் சற்று உங்களுக்கு புரிந்துகொள்வதில் சிரமங்கள் இருக்காது, அதாவது ஒரு பங்கு சந்தையில் என்ன லாபம் செய்கிறது என்பதினை குறிக்கும் ஒரு குறியீடு என்ற அளவில் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்,

இப்படி வைத்துகொண்டால் உங்களுக்கு EPS யும் PE RATIO வையும் ஒப்பிட்டு பார்த்து அதன் மூலம் ஒரு சரியான முடிவுக்கு வருவதற்கு உபயோகமாக இருக்கும், ஆகவே இப்படியே மனதில் வைத்துக்கொள்ளுங்கள், அதே நேரம் PE RATIO என்றால் என்ன என்பதினையும் சொல்லி விடுகிறேன் இதனையும் தெரிந்து கொள்ளுங்கள்,
அதாவது ஒரு பங்கு உண்மையாக வியாபாரம் செய்து பெரும் லாபத்தினை விட எத்தினை மடங்கு அதிகமாக பங்கு சந்தையில் வர்தகமாகிறது என்பதினை சொல்லும் ஒரு குறியீடு ஆகும், இந்த இடத்தில் ஒரு விஷயத்தை நான் உங்களுக்கு சொல்வது பயனுள்ளதாக இருக்கும், அதாவது பங்கு சந்தை எப்பொழுதுமே உண்மையான மதிப்பில் வர்த்தகம் ஆகாது! ஒரு வருடம், இரண்டு வருடம் அல்லது அதற்கும் மேல் வரும் நாட்களில் இந்த நிறுவனம் எப்படி இருக்கும் என்ற கண்ணோட்டத்திலே தான் வர்த்தகமாகும், ஆதலால் தான் இதனை ஊக வணிகம் என்றும் சொல்கிறோம்,

மேலும் அதிகமான ஏற்ற இறக்கங்கள் இருப்பதும் இதனாலேயே தான், இதற்க்கு உதாரணமாக நாம் முன்னர் பார்த்த BUS STAND உதாரணத்தை நினைத்து பாருங்கள், BUS STAND வரும் என்ற ஒரு புரளியினால் அடித்து பிடித்து அதன் அருகில் உள்ள நிலங்களை வாங்க என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்க தாயார இருக்கும் வர்த்தகர்களின் செயல்களினாலேயே அதன் விலை அடி மட்டத்தில் இருந்து எங்கோ பறந்து விடுகிறது இல்லையா அது போல்தான்,

இங்கு எப்பொழுதும் இப்படி ஊகத்தின் அடிப்படையில் தான் வர்த்தகம் நடக்கும், என்ன செய்வது! பாம்பு திங்கும் ஊருக்கு போனால் நடுத்துண்டம் கேட்டால் அதான் நமக்கு மதிப்பு, இங்கு இப்படி தான் கண்டுக்கொள்ளாதீர்கள், அதே நேரம் எவளவு தான் ஊகத்தின் அடிப்படையில் ஏறினாலும்! உண்மை என்ற நிலை சில நேரங்களில் வெளிப்படும், அப்பொழுது ஒரு மிகப்பெரிய ஆட்டங்கள் இருக்கும்! அது போன்ற ஆட்டங்களில் தான் பங்குகள் தடாலடியாக பாதாளத்திற்கு வருகிறது,

இப்படி வரும் போது ஒருவரின் உண்மை என்ன பொய் என்ன என்பது அனைவருக்கு தெரியும், இது போன்ற நேரங்களில் இந்த EPS மற்றும் PE RATIO நமக்கு கடவுள் போல் கைகொடுக்கும், இதனை சிறு உதாரண கதை மூலம் சொன்னால் எளிதாக இருக்கும், அதாவது சண்முக பாண்டியன் என்ற ஒரு நண்பர் சென்னையில் வசிப்பதாகவும், அண்ணா நகரில் அவருக்கு ஒரு GROUND நிலம் இருப்பதாகவும் வைத்துக்கொள்ளுங்கள், அதன் தற்பொழுதைய மதிப்பு 5 கோடி என்றும் வைத்துக்கொள்ளுங்கள்,

குடும்ப செலவுக்கென்று நிலையான வருமானமும் இவருக்கு உண்டு, எந்த வம்பு தும்புக்கும் செல்லாத தான் உண்டு தன் வேலை உண்டு என்று OFFICE அதை விட்டால் குடும்பம் என்று வாழ்ந்து வந்த நல்ல நபர், இவரின் அந்த அண்ணா நகரின் இடத்தின் மேல் பக்கத்து வீட்டு நண்பருக்கு ஒரு கண், மனிதன் 5 கோடி தருவதாகவும் கேட்டு பார்த்தார், என்ன செய்வது சண்முகப்பாண்டியன் ஒரே அடியாக மறுத்து விட்டார்,

6 கோடி தருவதாகவும் சொல்லியாகிவிட்டது, முடியாது என்றே மறுத்து விட்டார், வேண்டுமானால் 8 கோடிக்கு தருகிறேன் என்று சண்முகம் சொல்லி விட்டார், அவளவு விலைக்கு வாங்குவது நல்லது இல்லை என்று பக்கத்து வீட்டுக்காரர் அமைதி ஆகி விட்டார், இதில் சன்முகப்பண்டியனுக்கு ஒரு வித மகிழ்ச்ச்யும் கூட இருந்தது, சத்தம் இல்லாமல் கலரை தூக்கியும் விட்டுக்கொண்டார்,

என்ன செய்வது விதி வேறு மாதிரி இருந்து விட்டது, ஒரு நல்ல நாளில் அவரின் குடும்பத்திற்குள் ஒரு மிகப்பெரிய பூகம்பம், இவரை தவிர அவரின் குடும்பம் மொத்தமும் ஒரு உறவினர் திருமணத்திற்கு CAR இல் சென்று கொண்டிருக்கும் போது மிகப்பெரிய விபத்து, அனைவருக்கும் அறுவை சிகிச்சை செய்தால் கண்டிப்பாக காப்பாற்றி விடலாம் என்ற நம்பிக்கையை மருத்துவர் தந்துவிட்டார்,

அதற்க்கு ஈடாக ஒன்னரை கோடியில் இருந்து இரண்டு கோடி செலவு ஆகும் என்று குண்டையும் தூக்கி கையில் குடுத்து விட்டார், என்ன செய்வார் மனிதர், தான் உண்டு தன் வேலை உண்டு என்று குடும்பத்துடன் மட்டும் இருந்த நல்ல மனிதர், என்னதான் சேமிப்பு இருந்தாலும் இவளவு பெரிய தொகை எப்படி!!!!, யோசித்தார் மனிதன் அடுத்த நிமிடம் பக்கத்து வீட்டுக்காரர் முன் நின்றார்,

தனது நிலை விளக்கி அண்ணா நகர் இடத்தை வாங்கும் படி மன்றாடினார், விடுவாரா பக்கத்து வீட்டுக்காரர், இல்லப்பா நீ முடியாதுன்னு சொன்னவுடனே சைதாபேட்டையில் ஒரு இடம் வந்தது வாங்கி விட்டேன், அந்த பணம் இப்போ இல்லையே!, துடித்தே போனார் மனிதன்! அண்ணே நீங்க ஏதாவது பண்ணி வாங்கிக்கணும் எனக்கும் நீங்க சொன்ன பணம் கூட வேண்டாம்! அதில் பாதி குடுங்க போதும் என்று அலறியே விட்டார்,

விடுவாரா நம்ம அண்ணன்! இல்ல சண்முகா என்னிடம் அவளவு பணம் இல்ல இப்போ, கையில் ஒரு கோடி தான் இருக்கு வேண்டுமானால் இருன்னொரு ஒரு கோடி புரட்டி பார்க்கலாம் அதுக்கு மேல முடியாது, அண்ணே என்னன்னே இப்படி சொல்றீங்க தயவு பண்ணுன்கனே, நான் என்ன பண்றது சண்முகா, சரி உனக்காக வேண்டும் என்றால் நகையை அடகு வைத்து இன்னும் ஒரு 50 லட்சம் சேர்த்து தருகிறேன், அதற்கு மேல் என்னால் முடியாது என்றவுடன் வழி இல்லாமல் தாய் பத்திரத்தை கொடுத்து இரண்டரை கோடியை பெற்று கொண்டு சந்தோசமாக குடும்பத்தை காப்பாத்தி விட்டார்,

சண்முகத்திற்கு அடுத்த வீட்டுக்காரர் தெய்வமாக தான் தெரிந்தார், ஆனால் அடுத்த வீட்டுக்காரருக்கு உள்ளுக்குள் ஒரு நமட்டு சிரிப்பு, சரி விடுங்கள் நாம் விசயத்திற்கு வருவோம்,

இந்த கதையில் இருந்து நாம் தெரிந்து கொண்டது என்ன, இதற்க்கும் EPS மற்றும் PE RATIO வுக்கும் என்ன சம்பந்தம் என்று பார்த்து விடுவோம், அதாவது சண்முக பாண்டியனின் குடும்பம் விபத்தில் மாட்டிக்கொள்ளாவிட்டால் அவர் அந்த இடத்தை விற்கும் நினைப்புக்கே வந்து இருக்கு மாட்டார்,

அடுத்து சண்முக பாண்டியனின் நிலை அறிந்து பாதி விளைக்கும் வாங்கி விடலாம் என்று யோசித்து அடுத்த வீட்டுக்காரர் வாங்கி விட்டார், இருந்தாலும் அந்த இடத்தின் உண்மையான மதிப்புக்கும் கீழ் கிடைக்கிறது என்றவுடனே தனது மனைவியின் நகையை கூட அடகு வைத்து வாங்க தயாராக இருந்தார்,

இந்த இடத்தில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் உள்ளது , அதாவது அந்த இடத்தின் மதிப்பு 5 கோடி ஆனால் சன்முகப்பாண்டியனின் குடும்ப நிலை அதை பாதி விலைக்கு விற்க தயாராக அவரை மாற்றி விட்டது, அதே நேரம் 8 கோடிக்கு வாங்க மறுத்த அடுத்த வீட்டுக்காரர் அதன் உண்மையான விளைக்கும் கீழ் கிடைப்பதினால் தனது மனைவியின் நகையை கூட அடகு வைத்து வாங்க முற்படுகிறார்,

இவளவு RISK எடுக்க இருவருக்கும் காரணம் உள்ளது இல்லையா, அது தான் இங்கு முக்கியம், சந்தை மிகப்பெரிய CORRECTION ஐ சந்திக்கும் போது தனது உண்மையான மதிப்புக்கு அருகில் வரும் வாய்ப்புகள் உண்டு அந்த நேரத்தில் தான் நாம் வாங்க வேண்டும், அதாவது இதனை வேறு ஒரு கோணத்தில் சொல்ல வேண்டும் என்றால் இப்படி சொல்லலாம்

அதாவது சன்முகப்பாண்டியனின் குடும்ப சூழ்நிலையை நமக்கு உணர்த்துவது PE RATIO ஆகும், அதே போல் அவரின் அண்ணா நகர் GROUND இன் உண்மையான மதிப்பை நமக்கு உணர்த்துவது EPS ஆகும், இங்கு தனது குடும்ப சூழ்நிலை சரி இல்லாததால் தான் தனது 5 கோடி மதிப்புள்ள இடத்தினை வெறும் இரண்டரை கோடிக்கு விற்கவும் தயாராகிறார்,

அதாவது சந்தை CORRECTION ஐ சந்தித்ததால் தான் PE RATIO இறங்கி வந்துள்ளது, இது போன்ற இறக்கத்தினால் தான் EPS அளவை விட PE RATIO கீழே வரும் , ஆகவே EPS என்பது உண்மையான மதிப்பு, PE RATIO என்பது மாயையான ஊக மதிப்பு, சந்தை எப்பொழுதும் ஊக மதிப்பில் தான் வர்த்தகம் செய்யும்,

அப்படியானால் உண்மையான மதிப்பிற்கு கீழ் ஊக மதிப்பு CORRECTION என்ற காரணத்தினால் வந்தால் நாம் என்ன செய்ய வேண்டும், அடித்து பிடித்து வாங்க வேண்டாமா, ஏனெனில் மறுபடியும் ஊக மதிக்கு சென்று விடும் இல்லையா, அதாவது உங்களிடம் 5 கோடி மதிப்புள்ள சொத்தை 2 கோடிக்கு யாராவது அவரின் சூழ்நிலையின் காரணமாக விற்க முற்ப்பட்டால் வாங்குவீர்களா மாட்டீர்களா? வாங்குவீர்கள் தானே!,

அதே மாதிரி தான் ஒரு நிறுவனத்தின் உண்மையான லாபத்தினை குறிக்கும் குறியீடான EPS ஐ விட பங்கு சந்தையில் வர்த்தகமாகும் விலையினை குறிக்கும் குறியீடு குறைந்தால் வாங்குவோமா வாங்கமாட்டோமா, வாங்கி ஆக வேண்டும் இல்லையா, அப்படி தான் EPS ஐ விட குறைவாக எப்பொழுதெல்லாம் ஒரு பங்கின் PE RATIO வர்தகமாகிறதோ அப்பொழுதெல்லாம் நாம் வாங்க வேண்டும்,

இது போன்ற நிகழ்வுகள் எப்பொழுது அனைத்து பங்குகளிலும் ஏற்படும், சந்தை மிகப்பெரிய இறக்கத்தினை சந்திக்கும் போது தான் ஏற்படும், ஆகவே அப்பொழுதெல்லாம் நாம் வாங்க வேண்டும்,

சரி PE RATIO வை எப்படி கணக்கீடு செய்வது அதனை பற்றியும் பார்த்து விடுவோம்

PE RATIO = CMP/EPS

தற்பொழுது அந்த குறிப்பிட்ட பங்கு வர்த்தகமாகும் விலையுடன் முன்னர் நமக்கு கிடைத்த EPS என்ற அளவுடன் வகுத்தால் நமக்கு கிடைக்கும் அளவு PE RATIO ஆகும், இந்த அளவு EPS ஐ விட குறைவாக இருந்தால், 10 ரூபாய் மதிப்புள்ள பொருள் 5 ரூபாய்க்கு கிடைப்பது போல, அதே நேரம் EPS ஐ விட PE RATIO அதிகமாக இருந்தால் 10 ரூபாய் பொருள் 12 ரூபாய்க்கு கிடைப்பது போல, இது லாபம் இல்லை தானே, ஆகவே EPS ஐ விட PE RATIO குறைவாக இருந்தால் வாங்க வேண்டும், அதிகமாக இருந்தால் வாங்கக்கூடாது

உதாரணம்

சந்தையில் ஒரு பங்கின் விலை = 120

அதன் EPS = 10

SO அதன் PE RATIO = 120/10 = 12

இந்த மதிப்பு EPS ஐ விட அதிகம் இருப்பதால் இந்த பங்கை வாங்கக்கூடாது.

அடுத்த ஒரு உதாரணம்

சந்தையில் ஒரு பங்கின் விலை = 80

அதன் EPS = 10

SO அதன் PE RATIO = 80/10 = 80/10 = 8 ,

இந்த மதிப்பு EPS மதிப்பான 10 ஐ விட குறைவாக இருப்பதால் இது நல்ல நிலையில் உள்ளது, ஆகவே இதனை வாங்க வேண்டும்

மேற்கண்ட இரண்டு விசயங்களில் இருந்து நாம் கவனிக்க வேண்டியது என்ன வென்றால், ஒரு பங்கு 120 ருபாய் இருக்கும் போது, நமது கணக்கீட்டால் கணக்கிடும் போது அதன் உண்மையான மதிப்பை விட அதிகமான மதிப்பில் இருப்பதால் அதை வாங்க கூடாது, அதே பங்கு CORRECTION ஏற்பட்ட பிறகு 80 ரூபாய்க்கு வரும் போது அதன் மதிப்பு குறைந்துள்ளதால் இப்பொழுது வாங்க வேண்டும் புரிகிறதா,

சரி இந்த பதிவுடன் TECHNICAL ANALYSIS வகுப்புகள் முடிந்தது, அடுத்த பதிவில் தின வர்த்தகர்கள் வர்த்தகத்திற்கு செல்லும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்ன என்பதினை பற்றி பார்த்து விட்டு இனிதே நிறைவு செய்வோம்

Posted in பங்குச்சந்தை | பின்னூட்டமொன்றை இடுக